by wp_fhdn

பாட்டலிக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தற்காலிகமாக நீக்கம் 2016ஆம் ஆண்டு, இராஜகிரிய பிரதேசத்தில், வாகன விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்க, கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (10) அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் தனிப்பட்ட நோக்கத்திற்காக வெளிநாடு செல்ல விரும்புவதாக, நீதிமன்றில் தெரிவித்தார்.

அதற்காக, இன்று (10) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை, வெளிநாட்டு பயணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு, சட்டத்தரணிகள், நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த காலப்பகுதியில், சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்த உத்தரவிட்டதுடன், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை ஏப்ரல் 20 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்