3
மயானம் ஒன்றிற்கு அருகில் இரத்த காயங்களுடன் சடலம் மீட்பு ! on Friday, January 10, 2025
அநுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயானம் ஒன்றிற்கு அருகில் உள்ள குழியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை (09) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தில் இரத்த காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.