விபத்துக்குள்ளான சட்டத்தரணி சசிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
on Friday, January 10, 2025
திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
கடந்த திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்தபோது கென்றர் வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தவர் நேற்றிரவு (வியாழன் ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
தம்பிலுவில்லை சேர்ந்த சட்டத்தரணியும் திடீர் மரண விசாரனை அதிகாரியுமான திரு. சசிராஜ், இலங்கை சட்டக்கல்லுரியில் பயின்று சட்டத்தரணியாக வெளியேறினார்
கொழும்பு பல்கலையில் தடவையியல் மருத்து துறையில் டிப்ளோமா பட்டம்பெற்றவர். அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் என்பதுடன திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார் .
மேலும் தனது சொந்த நிதியில் பல்வேறு சமூக சேவைகளும் செய்துவந்துள்ளார்.