by adminDev

மி​யான்மர் ராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.

மி​யான்மரில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சுமார் 22 ஆண்டுகள் போராட்​டத்​துக்​குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டில் ராணுவம் பணிந்து ஜனநாயக ஆட்சிக்கு வழிவட்​டது.கடந்த 2015-ம் ஆண்டில் பொதுத்​தேர்​தலில் ஆங் சான் சூச்​சி​யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்​தது. கடந்த 2021-ம் ஆண்டில் ராணுவம் மீண்​டும் ஆட்சியை கைப்​பற்றியது. தற்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக எம்என்​டிஏஏ, டிஎன்​எல்ஏ மற்றும் ஏஏ ஆகிய 3 கிளர்ச்​சிக் குழுக்கள் ஒன்றிணைந்து ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றன. மியான்​மரின் 50 சதவீத பகுதிகள் கிளர்ச்​சிக் குழுக்​களின் கட்டுப்பாட்​டில் உள்ளது.

இந்த சூழலில் ஏஏ என்ற கிளர்ச்​சிக் குழு​வின் கட்டுப்பாட்​டில் உள்ள ராம்ரி தீவின் கியாக் நி மா என்ற கிராமத்​தின் மீது மியான்மர் ராணுவம் நேற்று முன்​தினம் திடீர் ​தாக்குதல் நடத்​தி​யது. இ​தில் 40 பேர் உயி​ரிழந்​தனர். 20 பேர் படு​கா​யம் அடைந்​தனர்​.

தொடர்புடைய செய்திகள்