இது களனிப் பல்கலைக்கழக மாணவர் சபையல்ல-திலித் ஆவேசம் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அதற்கு பதிலாக ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ போன்ற பல்வேறு தேசிய வேலைத்திட்டங்கள் மூலம் அதை மூடிமறைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.
பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 49 நாட்கள் கடந்துள்ள நிலையில், இது களனிப் பல்கலைக்கழக மாணவர் சபையல்ல , தேசத்தை ஆளும் சபை என்பதை அரசாங்கம் மறந்துவிட்டமையே இப்போது வெளிவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயவீர இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
“இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். ஆனால் உங்களின் சில உறுதிமொழிகள் அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்பட்டவை. அரசாங்கத்தில் உள்ள உங்களில் எவரேனும் லாப நஷ்டக் கணக்கைச் செய்திருந்தால், உங்கள் உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்ற முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் வருமானம் இல்லாமல் செலவு செய்ய முடியாது,” என்றார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிப்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மேலும் தெரிவித்தார்.