by wp_shnn

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று (8) வெளியிட்ட சமீபத்திய டி20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த நிலைக்கு அவர் 26 இடங்கள் முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்த பெத்தும் நிசங்க, இன்னும் அந்த கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்.

இருப்பினும், அவர் ஒரு இடம் பின்தங்கி தற்போது 7வது இடத்தில் உள்ளார்.

இதற்கிடையில், டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் கமிந்து மெண்டிஸ் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அத்துடன் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பிரபாத் ஜயசூர்ய 7வது இடத்தை பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்