by wp_shnn

லொஸ் ஏஞ்சல்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ அமெரிக்காவின் 2-வது பெரிய நகரமான லொஸ் ஏஞ்சல்ஸில் நேற்று (8) திடீரென காட்டுத்தீ பரவ தொங்கிய நிலையில் தீயில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.

நேற்று மாலை, ஹோலிவுட் பவுல்வர்டில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள ஹோலிவுட் குன்றில் தீ ஏற்பட்டது.

இந்த தீ பரவ தொடங்கியதால் தெருக்களுக்குள் குடியிருக்கும் மக்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யவதற்காக அந்த பயணத்தை ரத்து செய்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தீ கட்டுக்குள் வருவதற்கான அனைத்து முயற்சிகளை நாங்கள் செய்து வருகிறோம்” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்