3
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் வியாழக்கிழமை (9) முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு படகுகள் வழங்கி வைக்கப்பட்டன.
வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்திற்குட்பட்ட துணை சங்கங்களின் 20 பயனாளிகளுக்கு சமாச தலைவர் த.தங்கரூபனால் தாளையடி நன்னீர் திட்ட அலுவலகத்தில் வைத்து வியாழக்கிழமை (9) வழங்கப்பட்டது.
40 படகுகளுக்குமான இயந்திரங்கள் இன்னும் சில நாட்களில் தாளையடி நன்னீர் திட்ட அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படுமெனவும் 5 வருடங்களுக்குள் கையளிக்கப்பட்ட படகு மற்றும் இயந்திரத்தை விற்பனை செய்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சமாச தலைவர் தங்கரூபன் தெரிவித்துள்ளார்.