2024 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து 5000 மெற்றிக்தொன் வரையிலான நெல்லை மாத்திரமே அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.
இம்முறை 45 இலட்சம் மெற்றிக்தொன் நெல் விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் 3 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என கமத்தொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் போது வருட முழுவதற்கும் உரியவாறாக அமையும் வகையில் நெல்லுக்கு உத்தரவாத விலை பேணப்படாத காரணத்தால் விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்ப்பட்டுள்ளார்கள். வர்த்தகர்கள் விலையை தீர்மானித்துக் கொள்ளும் நிலை காணப்படுகிறது.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.