நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை சுழற்பந்து நட்சத்திரம் மகேஷ் தீக்ஷன ஹெட்ரிக் சாதனை புரிந்தார்.
இதன் மூலம் 2025 ஆம் ஆண்டு ஹெட்ரிக் சாதனை புரிந்த முதல் ஐசிசி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஹெமில்டனில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தீக்ஷன, நியூஸிலாந்தின் மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித் மற்றும் மேட் ஹென்றி ஆகியோரை தொடர்ச்சியான பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து இந்த சாதனையை படைத்தார்.
சுழற்பந்து வீச்சாளர் 35 ஆவது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் சான்ட்னர் மற்றும் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்தார்.
37 ஆவது ஓவரின் முதல் பந்து வீச்சில் ஹென்றியின் விக்கெட்டை கைப்பற்றி சாதனையை நிறைவு செய்தார்.
இந்த சாதனையுடன் லசித் மலிங்கா, சமிந்த வாஸ், ஃபர்வீஸ் மஹரூப், திசர பெரேரா, வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த மதுஷங்க உள்ளிட்ட புகழ்பெற்ற இலங்கை பந்துவீச்சாளர்களுடன் ஹெட்ரிக் சாதனை புரிந்த இலங்கை வீரர்களின் பட்டியலில் இணைந்தார் தீக்ஷன.