by wamdiness

புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (08) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீடுகள் நிறைவடைந்த 40 நாட்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்றது.

244,092 சிங்கள மொழி மூலமும் 79,787 தமிழ் மொழி மூலமும் உட்பட மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு பதிவு செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்