மழையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இலங்கையின் சுழற்பந்து நட்சத்திரம் மகேஷ் தீக்ஷன ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
எனினும், 37 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 255 ஓட்டங்களை எடுத்தது.
அதன் பின்னர், 256 ஓட்டம என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 30.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியுடன் நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வெலிங்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் மோசமாக துடுப்பெடுத்தாடியது தொடரின் இழப்புக்கு வழி வகுத்தது.
ஹாமில்டனில் இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளும் வெறும் 22 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது.
இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியானது ஆக்லாந்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.