12
ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வௌியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, 500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களுக்காக தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்தல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி சட்டத்தரணி சம்பத் யாலேவத்தவினால் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.