14
மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் ! on Saturday, January 04, 2025
புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில், மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா கூறுகையில், பல்வேறு வைரஸ் சுவாச நோய்கள் பாடசாலைகளில் பரவக்கூடும்.
மாணவர்களின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று, அவர் கேட்டுக்கொண்டார்.
சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.