சிவனொளி பாதமலை யாத்திரர்களின் கவனத்துக்கு ! on Friday, December 27, 2024
சிவனொளி பாதமலை பருவ காலத்தில் மது மற்றும் போதை பொருள் பாவித்து வருபவர்கள் மற்றும் அதனை சூசகமாக கொண்டு வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், மீறி போதைப் பொருள் மற்றும் மதுபானம் கொண்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடுவார்கள் என்று ஹட்டன் வலய போதைப் பொருள் பிரிவின் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
அதன்படி மதுபானங்கள், புகையிலை அடங்கிய போதைப் பொருள், போதைப் பொருட்கள் தமது பொதிகளில் வைத்து இருப்பது,வர்த்தக நிலையங்களில் வைத்து இருப்பது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் சட்ட விரோதமானது.
அதையும் மீறி இவ்வாறு போதைப் பொருட்களை வைத்து இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் சிவனொளி பாதமலை உச்சியில் உள்ள ஆலயம், தங்குமிடம் மடங்கள், அடிவாரம் முதல் மலை உச்சி வரை உள்ள சகல வர்த்தக நிலையங்களில் சட்டவிரோதமான பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக விசேட போதை பொருள், தடுப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தி உள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
விற்பனை நிலையங்களில் பூஜை பொருட்கள்? சுத்தமான குடிநீர் பாதுகாப்பான முறையில் உணவு பண்டங்கள் தவிர வேறு எந்த பொருளையும் விற்பனை செய்ய தடை விதிக்க பட்டு உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.