வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் டிப்பர் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் , டிப்பர் சாரதி ,பெண்ணொருவரும் அவரது 04 மாத குழந்தையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹபரனை – திருகோணமலை வீதியில், கல்லோயா பகுதியில் உள்ள பொலிஸ் வீதி தடையில் பொலிஸார் கார் ஒன்றினை மறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை , வேகமாக வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து , காரினை சோதனை செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மோதி , காரையும் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதன் போது , கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், காரினுள் இருந்த பெண்ணும் அவரின் 04 மாத குழந்தையும் , டிப்பர் வாகனத்தின் சாரதியும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வேளையில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் ஹபரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அவர்களை மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்
சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்/