3
விபத்தில் இளைஞன் பலி வவுனியா கோவில்குளம் பகுதியில் புதன்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் யாழ். அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மற்றொரு இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போது கோவில்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்