ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமி தொடர்பான அப்டேட்!

by wamdiness

கடந்த திங்கட்கிழமை (23) ராஜஸ்தானின் கோட்புட்லியில் (Kotputli) ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மூன்றரை வயது சிறுமியைக் காப்பாற்றும் முயற்சிகள் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளன.

சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பேரிடர் மீட்புப் பணியாளர்கள் இன்று (26) மீட்புப் பணியை முடிப்பார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிறுமியைக் காப்பாற்ற பணிகளை இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையின் விவசாயப் பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியைக் காப்பாற்ற இந்திய பேரிடர் மீட்புப் படை (NDRF) மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் உள்ளூர் நிர்வாகம் உள்ளிட்ட அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணி குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய NDRF குழுவின் பொறுப்பாளர் யோகேஷ் குமார் மீனா, ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமியை அடைய 170 மீட்டர் ஆழம் வரை தோண்ட வேண்டும் என்றார்.

இதனிடையே, சிறுமிக்கு ஆக்ஸிஜன் வழங்குவதற்காக ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் குழாய்கள் மற்றும் கண்காணிப்பு கமராக்களும் செலுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்