கோழிக்கறியை லஞ்சமாக பெற்றதாக கூறி வருமான துறை அதிகாரிகள் உட்பட பிரதேச சபை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மீரிகம பிரதேச சபைக்குட்பட்ட வேவல்தெனிய உப காரியாலயத்தில் கடமையாற்றும் வருமான வரி உத்தியோகத்தர் உட்பட இருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் 1000 ரூபா பெறுமதியான கோழிக்கறியை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மீரிகம பிரதேச சபை ஊழியர் உட்பட சந்தேக நபர்கள் இறைச்சி கடைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் அத்தனகல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் கடையின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை மீளாய்வு செய்வதற்காக கொஸ்கம பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளரிடம் இலஞ்சம் கோரிய போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.