விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது! கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 04 கிலோகிராம் 388 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய பயகம பகுதியைச் சேர்ந்தவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.