மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளரவு ஆராதனை !

by adminDev2

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளரவு ஆராதனை ! on Wednesday, December 25, 2024

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.

புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.

இதன்போது நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள்,ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

அத்துடன் கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தது.

மேலும் மரியால் பேராலயத்திற்குள் வாகனங்கள் செல்ல அனுமதிக்காத நிலையில் பெருமளவான படையினர் பாதுகாப்ப பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

எதிர்வரும் ஆண்டானது ஜேசு பிறப்பின் 2025ஆவது ஆண்டாகவுள்ளதனால் பொப் ஆண்டகையினால் ஜுப்லி ஆண்டாக பிரகடனப்படுத்தவுள்ளதாகவும் எதிர்வரும் ஆண்டு பல்வேறு நிகழ்வுகள் மறை மாவட்டங்கள் தோறும் நடைபெறவுள்ளதாக ஆயரினால் இங்கு தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்