எங்கள் நாடு விற்பனைக்கு இல்லை; ட்ரம்பிற்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி!

by wp_shnn

அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்  கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதாக கடந்த  ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

அத்துடன் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக, கிரீன்லாந்தின் உரிமையும், அதன் கட்டுப்பாடும் அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது’ எனவும்  ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில் ட்ரம்ப் தெரிவித்த கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் எங்கள் நாடு விற்பனைக்கு இல்லை என கிரீன்லாந்தின் பிரதமர் மூட் எகெடே ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘கிரீன்லாந்து எங்களுடைய நாடு. விற்பனைக்கு கிடையாது. ஒரு போதும் விற்பனை செய்ய மாட்டோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ‘அமெரிக்காவின் விருப்பத்தை முறியடிக்க வேண்டும். இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும்’ என்ன அந்நாட்டின்  நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் தலைவர் ஜார்லோவ் தெரித்துள்ளார்.

இதேவேளை ட்ரம்பின் கருத்துக்கு டென்மார்க் அரசும்  கடும் எதிர்ப்பினை  வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

……..

கிரீன்லாந்து, ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள தீவு நாடாகும். அரசியல் ரீதியாக ஐரோப்பாவுடன் இணைந்திருந்தாலும், புவியியல் ரீதியாக கிரீன்லாந்து வட அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்ததாகும்.
எவ்வாறு இருப்பினும் தங்கள் நாட்டின் விமானப்படை தளம் இங்கு இருப்பதால், இதை தங்களுக்கே சொந்தமாக்க அமெரிக்கா விரும்புகிறது. கடந்த முறை ஜனாதிபதியாக  இருந்தபோது ட்ரம்ப் இந்த கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்