5
இலங்கையில் முதல் முறையாக பதிவான அரிய நோய் இலங்கையில் முதன்முறையாக Congenital Methemoglobinemia என்ற மிக அரிதான நோய் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி மதவாச்சி பகுதியிலுள்ள குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவு விசேட வைத்திய நிபுணர் எம். ஆர். எஸ்.யு. சி. ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
உடல் நீல நிறமாக மாறுவதும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதும் இந்த நோயின் அறிகுறிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.