4
தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான அனுமதியினை எதிர்வரும் ஜனவரி 10 வரை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த 20 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் மற்றும் அரச இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்போது, மொத்தமாக 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
Related
Tags: rice importsஅமைச்சரவைஅரிசி