3
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பணத் தகராறு தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
முறைப்பாட்டை விசாரித்து, முறைப்பாட்டாளருக்கு தர வேண்டிய பணத்தை பெற்றுத்தர தேவையான ஏற்பாடுகளை செய்து தர முடியும் என கூறி, அதற்காக ஐயாயிரம் ரூபாவை இலஞ்சமாக சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டார்.