நியுயோக்கில் சீனாவின் இரகசிய பொலிஸ்நிலையம் சீன அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவின் நியுயோர்க்கில் இரகசிய பொலிஸ்நிலையமொன்றை நடத்தியதை நபர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சென்ஜின்பிங் என்பவரும் லு ஜியான்வாங் என்பவரும் மான்ஹட்டன் சைனா டவுனில் 2022 இல் சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பொலிஸ்நிலையத்தை உருவாக்கினார்கள் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையத்தில் சீன பொதுமக்களிற்குவாகனச்சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன அதேவேளை அமெரிக்காவில் வசிக்கும் ஜனநாயக ஆதரவாளர்களை அடையாளம் காண்பதற்குசீனா இதனை பயன்படுத்தியது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் இறைமைக்கு எதிரான விடயம் இதனை சகித்துக்கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா இவ்வாறான 100க்கும் மேற்பட்ட பொலிஸ்நிலையங்களை 53 நாடுகளில் இயக்குவதாகவும் வெளிநாடுகளில் உள்ள சீனர்களை அச்சுறுத்துவதற்கு அதனை பயன்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் சீனா இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதுடன் அவை தனது பிரஜைகளிற்கு சேவைகளை வழங்கும் நிலையம் என தெரிவித்துள்ளது.