உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத் திருத்தத்தை விரைவாக நிறைவேற்றுங்கள் ; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் ! on Tuesday, December 24, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யாமல் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் வாக்கெடுப்பு தினத்தை தீர்மானிப்பதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது.
ஆகவே சட்டத்திருத்த பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் நடத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியிருப்பதாக ஆரம்பிப்பது.
ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிதாக வேட்புமனுக்களை கோருவதாயின் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை திருத்தம் செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு அறிவுறுத்தியிருந்தது.
உள்ளூராட்சி மன்ற சபை சட்டத்தை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் திருத்தம் செய்வதாக அரச நிர்வாகம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளது.
குறித்த சட்ட திருத்தத்தை வெகுவிரைவில் நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், தேர்தல் பணிகளை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுக்க வேண்டும் ஆகவே சட்டத்திருத்தத்தை துரிதமாக நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
உத்தேச உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலுக்கு 80 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தேர்தல் செலவுகளை மதிப்பிடுவது கடினமானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பான சட்ட வரைவினை எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதாகவும் உறுதியளித்திருந்தார்.