ஜாஎல பகுதியில் வீடொன்றின் மீது சூடு ! on Tuesday, December 24, 2024
ஜாஎல புனித அனா பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறித்த வீட்டின் நுழைவாயில் கதவு மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு T56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள உலகக் கும்பல் தலைவன் பட்டுவத்த சாமரவின் மனைவிக்குச் சொந்தமான குறித்த வீட்டின் மீது கடந்த டிசம்பர் 15ஆம் திகதி இரவும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை பட்டுவத்த சாமரவின் வீட்டின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணையை ஜாஎல பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.