வேண்டிய காரியம் நிறைவேற முருகனுக்கு மாவிளக்கு பரிகாரம்!

by wp_fhdn

கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக இருக்கக் கூடியவர் முருகப் பெருமான்.

முருகப் பெருமானை நம்பியோர் யாரும் கைவிடப்படுவது கிடையாது.

ஒளி பொருந்திய மாசற்ற கந்தனுடைய சன்னதியை பார்த்து கை கூப்பி வழிபடுபவர்களுக்கு வலியெல்லாம் பறக்கும்.

உங்களுடைய மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றுவது தான் அவருடைய முழுமுதற் வேலையாக இருக்கிறது.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய ஆசைகளில் ஒன்று நீண்டகாலமாக நிறைவேறாமலே தள்ளி சென்று கொண்டிருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு வேண்டுதலை முருகப்பெருமானை நினைத்து வேண்டி இந்த ஒரு மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றி வருவதன் மூலம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

தொடர்ந்து ஏழு நாட்கள் தவறாது இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

தேனும், தினையும் கலந்து மாவிளக்கு செய்ய வேண்டும். தினை மாவு கடையில் வாங்கினாலும் சரி அல்லது தினையை வாங்கி லேசாக வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்து மாவாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாவுடன் தேவைக்கு ஏற்ப சுத்தமான தேனை சேர்க்க வேண்டும். பின்பு கெட்டியாக பிசைந்து விளக்கு போல செய்து அதில் ஒற்றை திரி போட வேண்டும்.

மனதில் ஒரே ஒரு ஆசையை மட்டும் வேரூன்றி விதைத்து அதை நிறைவேற வேண்டும் என்று வேண்டுங்கள்.

முருகனுடைய சன்னதிக்குச் சென்று இந்த தினையும், தேனும் கலந்த மாவிளக்கை வைத்து தீபம் ஏற்றுங்கள்.

இது போல தொடர்ந்து ஏழு நாட்களும் புதிதாக மாவிளக்கு செய்து தீபம் ஏற்றி முருகனை மனதார வழிபட வேண்டும்.

தேனும் தினையும் கலந்து மாவிளக்கு போடும் பொழுது முருகனே நேரில் வந்து அருள் புரிவதாக ஒரு ஐதீகம் உண்டு.

தொடர்புடைய செய்திகள்