சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயதுச் சிறுவன்!

by sakana1

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வசித்து வரும்  ஆரிப் என்ற 4 வயதுச் சிறுவன்  வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

நஜிமுல் ஹக் மற்றும் பாத்திமா நஸ்ரினின் மகனான இவர் சிறந்த  ஞாபக சக்தி கொண்டவர் எனவும் தனது சிறு வயது முதலே

வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  சோலன் உலக சாதனை புத்தகத்தில் ஆரிப் படைத்த சாதனையின் விபரம் 

1) மனித உடலின் முக்கிய எலும்புகள் 41 இன் பெயர்களை 13:46 நொடிகளில் ஒப்புவித்துள்ளார்.

2) பவர் ஆஃப் டென்(Power of Ten) எண்களை ஒரு நிமிடம் மற்றும் 6 நொடிகளில் ஒப்புவித்துள்ளார்.

3) ஒன்று முதல் 100 வரையான ஓடினல்(Ordinal)எண்களை 42 நொடிகளில் ஒப்புவித்துள்ளார்.

4) டெசிமல்(Decimal) எண்களை  ஒரு நிமிடம் மற்றும் 17 நொடிகளில் ஒப்புவித்துள்ளார். அத்துடன் அவற்றை வேகமாக எழுதியும் காட்டியுள்ளார்.

5) நடுவர்கள் குறிப்பிட்ட எலும்புகளை துல்லியமான அடையாளம் காட்டிய அதேவேளை எலும்புகள் இருக்கும் இடங்களையும் சரியாகத் தொட்டுக் காட்டியுள்ளார்.

6) அனைத்து ப்ராக்சன்(fraction) எண்களையும் எழுதிய அதேவேளை சரளமாக வாசிக்கவும் செய்துள்ளார்.

7) டெசிமல்களை (Decimals) ப்ராக்சனாக( fractions) மாற்றிய அதேவேளை ப்ராக்சன்களை டெசிமல்சாக மாற்றினார்.

8) 40 வரையான பெரிய இலக்கங்களை (Big numbers) 4 நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் வாசித்தார்.

குறித்த சாதனையை  சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைச் செயலாளர் திரு.கதிரவன் த. இன்பராசா, திருகோணமலை மாவட்டத் தலைவர் திரு.எம்.தனராஜ், திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் திரு.சுயந்தன் விக்ணேஷ்வர ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினரான இயன்முறை மருத்துவர் திரு.மொஹமட் நஸ்மி மற்றும் செயற்குழு உறுப்பினரான திரு.எம்.எஸ்.எம். பர்சான் முன்னிலையில் ஆரிப் நிகழ்த்தியுள்ளார்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்துடன் இணைந்து பீப்பிள் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷன் இந் நிகழ்வு கிண்ணியா மத்திய கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எம்.ச்.ஹீனதுல் முனவ்ரா சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டார்.

இதன்போது ஆரிப்பிற்கு சான்றிதழ், நினைவுக்  கேடயம், தங்கப்பதக்கம் ஆகியன சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்