வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50 யானைகள் மின்சாரம் தாக்கி மரணம் !

by wamdiness

on Monday, December 23, 2024

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்குண்டு சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் உள்ள காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்களின் ஆதரவு அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள மின்சார வேலிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் இலங்கை மின்சார சபையின் 0112 118 767 அல்லது 1987 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்