5
மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது ! on Monday, December 23, 2024
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டுப் பிரதேசத்தில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று திங்கட்கிழமை (23) முற்றுகையிடப்பட்டது.
இதன்போது, 540,000 மில்லி லீற்றர்கோடா மற்றும் 70000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.