பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

by wamdiness

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய இரு சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி களனி, திப்பிட்டிகொட பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்படி, இந்தக் குற்றச் செயல்களுக்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் நேற்று (22) காலை கிரிபத்கொடை, தலுகம பிரதேசத்திலும், பேலியகொடை, பட்டிய சந்தி பிரதேசத்திலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 53 வயதுடைய களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்