தமிழக கடற்தொழிலாளர்கள் மீது கடற்கொள்ளையர்கள் கடலில் வைத்து, தாக்குதலை நடாத்தி , 03 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே படகொன்றில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக மீனவர்கள் மீது, 2 படகில் வந்த 6 கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை வழி மறித்தது, கடற்தொழிலாளர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி விட்டு படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
தாக்குதலில் காயமடைந்த மூன்று கடற்தொழிலாளர்களும் , கரை திரும்பிய நிலையில் , அவர்களை சக கடற்தொழிலாளர்கள் மீட்டு, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தம்மை தாக்கி விட்டு, படகில் இருந்த மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் (இந்திய)மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றுள்ளனர் என பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்