7
வேன் ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதி விபத்து ; ஒருவர் பலி ! on Saturday, December 21, 2024
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ இடைமாற்றுக்கு அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
கொட்டாவையில் இருந்து காலி நோக்கி பயணித்த வேன் ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த வேனில் பயணித்த 62 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேனின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.