9
இன்று உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் போர்த்துக்கல் தூதரகம் சேதமடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போர்த்துக்கல்லின் தூதரகம் பல இராஜதந்திர பணிகளுடன் தேசமடைந்தது என போர்த்துக்கல்லின் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது.
எந்தவொரு தாக்குதலும் இராஜதந்திர வளாகங்களை குறிவைப்பது அல்லது தாக்கத்தை ஏற்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என போர்த்துக்கல்லின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் ஒன்றில் தெரிவித்தது.
போர்த்துக்கல்லில் ரஷ்யத் தூதுவர் வரவழைக்கப்பட்டு தங்களது எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.