குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பு நிறைவு !

by 9vbzz1

குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பு நிறைவு ! on Thursday, December 19, 2024

இவ்வருட குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்புக்கு அமைய வீடற்றவர்களின் தகவல் சேகரிப்பு நேற்று (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, இவ்வருட தொகைமதிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், அடுத்த 05 நாட்களுக்கு தொகைமதிப்பு நடவடிக்கைகளை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 07ம் திகதி முதல் குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பில் மக்கள் மற்றும் வீடுகளின் தகவல்ளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பமானது.

தொகைமதிப்பு அலுவலர் இதுவரை வீடுகளுக்குச் சென்று தகவல்களைப் பெறவில்லை என்றால், அது தொடர்பில் 1901 என்ற குறுகிய தொலைபேசி இலக்கம் ஊடாக அறிவிக்குமாறும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொகைமதிப்பு நடவடிக்கைகளை புதுப்பித்து ஒரு மாதத்திற்குள் முதற்கட்ட அறிக்கை வெளியிடப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்