18
சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட மாடுகளுடன் இருவர் கைது ! on Wednesday, December 18, 2024
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள நீணாக்கேணி பகுதியில் வைத்து, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மாடுகளுடன் இருவரை சம்பூர் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதன்போது அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட 7 மாடுகள், மாடுகள் ஏற்றிச் செல்லப்பட்ட பட்டா ரக வாகனமொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்தோடு இரண்டு சந்தேக நபர்களையும் சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.