ரஷ்யாவில் குண்டு வெடிப்பு: அணு ஆயுதப் படைகளின் தலைவர் பலி!

by guasw2

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே மின்சார ஸ்கூட்டர் ஒன்றில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வெடித்தது. இதில் ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்புப்படைகளில் தலைவரான லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

கிரெம்ளினில் இருந்து தென்கிழக்கே சுமார் 7 கிமீ (4 மைல்) தொலைவில் உள்ள ரியாசான்ஸ்கி ப்ரோஸ்பெக்டில் உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு வெளியே இந்தக் குண்டு வெடிப்பு நடந்தது.

மேலும் இந்த வெடி விபத்தில் உயிரிழந்த மற்றொருவர், கிரில்லோவின் உதவியாளர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஜெனரல் தனது வீட்டிலிருந்து வெளியே வரும்போது தானியங்கி மூலம் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்