மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்ககோரி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கசிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையினால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வவுணதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரியையும் சந்தித்த போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
அங்குள்ள விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியிடம் பிரதேசத்தில் காணப்படும் சட்ட விரோத கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்க உதவுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் மகஜர் ஒன்றும் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பேரணியானது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக வருகைதந்து அங்கும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யோகராஜாவுடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கலந்துரையாடினார்கள்.