11
மட்டக்களப்பு – செட்டிபாளையத்தில் நின்று கொண்டிருந்த பஸ் ஒன்றுடன் அம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்து ! on Tuesday, December 17, 2024
மட்டக்களப்பு , செட்டிபாளையம் பிரதேசத்தில் லண்டன் சிவன் சைல்ட் ஹோம் முன்பாக இ.போ.ச பஸ் ஒன்றுடன் அம்புலன்ஸ் வாகனம் மோதியதில் அம்புலன்ஸ் வாகனத்தில் பயணித்த சாரதி மற்றும் பொதுச்சுசுகாதார பரிசோதகர் ஒருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.
நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் அதிவேகமாக அம்புலன்ஸ் மோதியமையால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர் .