வைத்தியசாலையினுள் உட்செல்ல தடை

by guasw2

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளவினுள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் உதவியாளர் கௌசல்யா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்று பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, காவல்துறையில்; முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடன் சட்டத்தரணி கௌசல்யாவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், அத்துமீறி உள் நுழைந்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையிலேயே வழக்கு இன்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவரையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னதாக மன்னார் நீதிமன்றிலும் அத்துமீறி உள் நுழைந்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று சாவகச்சேரி வைத்தியசாலையில் அத்துமீறி உள் நுழைந்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்