அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கல்வி இளமானி சிறப்பு கற்கை நெறி ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களின் கண்காட்சி ! on Sunday, December 15, 2024
(பாறுக் ஷிஹான்)
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கல்வி இளமானி சிறப்பு கற்கை நெறிக்காக 2022-2025 ஆம் ஆண்டு ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களால் ஆரம்பப் பிரிவுக்கான விஞ்ஞானம் ( Science for Primary) எனும் தொனிப் பொருளில் 2024. 12.15 ஞாயிற்றுக்கிழமை கண்காட்சி நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக கணேசரத்தினமும் கௌரவ அதிதிகளாக ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல் விரிவுரையாளர்களாக கடமையாற்றிய கே. கமலதாசன் மற்றும் எம்.எச்.எஸ்.ஆர் மஜீதிய்யா ஆகியோரும் விசேட அதிகளாக ஏ.எம். முபாரக் கே.எல்.எம். பார்சாட் ரி. திலகாராஜா உட்பட ஏனைய விரிவுரையாளர்களான ஏ.ஜே. வசீல் ஏ.ஏ. ரமீஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வுகளுக்கு இணைப்பாளராக எஸ்.என்.ஏ அரூஸ் கடமையாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.