கல்வி அமைச்சுக்கு முன் போராடிய மேலும் மூவர் கைது !

by adminDev2

கல்வி அமைச்சுக்கு முன் போராடிய மேலும் மூவர் கைது ! on Sunday, December 15, 2024

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 16,000 பேரை ஆசிரியர் தொழிலில் உள்வாங்குமாறு கோரி, கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் கடுவெல பதில் நீதவான் டெலனி முனசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றைய நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 04 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்