முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆய்வு மாநாட்டில் பங்குபற்றி சாதனைபடைத்த மட்/ பட்/பட்டிருப்பு தேசிய ப

by guasw2

முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆய்வு மாநாட்டில் பங்குபற்றி சாதனைபடைத்த மட்/ பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி.

on Sunday, December 15, 2024

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து அண்மையில் கொழும்பு மருத்துவ பீடத்தில் 2024 நவம்பர் 26, 27 ஆகிய தினங்களில் நடாத்தப்பட்ட முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆய்வு மாநாட்டில் பங்குபற்றுவதற்கு மட்/பட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியில் இருந்து 5 ஆய்வுகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் மாணவர்கள் தமது 5 ஆய்வு முன்மொழிவுகளையும் இலங்கையின் தலைசிறந்த விஞ்ஞானிகள் முன்னிலையில் எடுத்துரைத்தனர். இம்முன்மொழிவுகள் விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் இவை அவர்களால் வெளியீடு செய்யப்படுகின்ற “விஞ்ஞான குரல்” எனும் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இருந்து இப்பாடசாலை மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருந்தது என்பதும் பெருமைக்குரிய விடயமாகும்.
இப்போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களும் பொறுப்பாசிரியர்களும், அதிபர் மற்றும் பெற்றோருடன் 2024 நவம்பர் 25ம் திகதி நிலவிய மிகவும் அபாயகரமாண அசாதாரண சூழ்நிலையிலும் கொழும்புக்கு சென்று குறித்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர்களுக்கும், இப்பாடசாலையின் மாணவர்களை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக பயிற்றுவித்து தொடர் வெற்றிகளை பெற வழிகாட்டிவரும் ஆசிரியர்களான திரு. எஸ்.தேவகுமார் மற்றும் திரு. ரி.யுதர்சன் ஆகியோருக்கும் நாமும் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

பங்குபற்றிய மாணவர் விபரம்
T.Abidshan, S.Merukaasan, P.Pranavan, V.Narendraprasath, P.Shapthavi, K.Revanthiya, G.Bovilaashini
S.Shapthangsana, U.Pireethika
V.Nathusa, S.Dilaxchi, R.Akshitha

தொடர்புடைய செய்திகள்