13
போதைப்பொருளுடன் ஒருவர் கைது ! on Sunday, December 15, 2024
கல்கிஸை – அத்திடிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸை வலய குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதான சந்தேகநபரிடம் இருந்து 101 கிராம் 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 34 வயதுடைய தெஹிவளை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.