பஸ் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் உயிரிழப்பு !

by wamdiness

பஸ் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் உயிரிழப்பு ! on Friday, December 13, 2024

எல்பிட்டிய – பிடிகல வீதியில் தலகஸ்பே பகுதியில் பஸ் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கலகஸ்பே பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் ஆவார்.

எல்பிட்டியவில் இருந்து பிடிகல நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கி விட்டு வலது பக்கமாக திரும்ப முயன்ற போது வீதியில் பயணித் பெண் ஒருவர் பஸ்ஸின் பின்புறத்தில் உள்ள சக்கரமொன்றில் சிக்கி காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்தவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்