கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலராக M.Z.M பைசல் நியமனம் !

by guasw2

on Wednesday, December 11, 2024

அரநாயக்க தல்கஸ்பிடியவை பிறப்பிடமாகவும் மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட இஸட். ஏ.எம். பைசல், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயன்தலால் ரத்னசேகரவினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரநாயக்க பிரதேச சபையின் முன்னாள் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளராகவும் கடமையாற்றி பதவி உயர்வு பெற்று, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றி வந்தநிலையில் தற்பொழுது கிழக்கு மாகாண முதலமைச்சரின் “நிதி மற்றும் திட்ட அமுலாக்கல் சட்டம் ஒழுங்குபடுத்தல், உள்ளூராட்சி நிர்வாக கிராம அபிவிருத்தி, சுற்றுலாத் துறை (சுற்றாடல்) மற்றும் தொழிற்சாலை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்