8
வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது ! on Tuesday, December 10, 2024
18 இலட்சத்திற்கு விற்பனை செய்யத் தயார் செய்யப்பட்ட இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜாஎல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 32 வயதுடைய கொபேகனே பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.