அருச்சுனா கட்டைப்பஞ்சாயத்து!

by adminDev2

நாடாளுமன்ற உறுப்பினராகிய நிலையில் தனது கட்டைப்பஞ்சாயத்துக்களை இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்;நிலையத்தில் யாழ்.போதனாவைத்தியசாலை நிர்வாகத்தினால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ் . போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த.சத்தியமூர்த்தியினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைப்பிரகாரம் புதிய அரச நியமனங்களை முன்னெடுக்காதுள்ளது.

இந்நிலையில் வெளிவாரி அடிப்படையில் யாழ்.போதனாவைத்தியசாலை தொழிலாளர்களது சேவையை பெற்றுவருவதுடன் புலம்பெயர் மக்களது உதவியுடன் ஊதிய கொடுப்பனவுகளை வழங்கிவருகின்றது.

எனினும் வெளிவாரி ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி புதிய அரசிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாடிவரும் நிலையில் கட்டைப்பஞ்சாயத்தில் குதித்துள்ள இராமநாதன் அர்ச்சுனாமீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   

இதனிடையே எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் விடயத்தை பேச காத்திருப்பதாக அருச்சுனா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்